ரவை பழ புட்டு

Webdunia|
தேவையான பொருட்கள்:

ரவை - 200 கிராம்
சர்க்கரை - 125 கிராம்
நெய் - 3 மேஜைக்கரண்டி
ஆரஞ்சு - 2 (இனிப்பானது)
கறுப்பு திராட்சை - 50 கிராம்
தக்காளிப்பழம் - 75 கிராம்
ஆப்பிள் - 1 (சிறியது)
முந்திரி பருப்பு - 50 கிராம்
வெனிலா எசன்ஸ் - 1 தேக்கரண்டி

செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து 2 மேஜைக்கரண்டி நெய்விட்டு முந்திரி பருப்பை பொன்னிறமாக வறுத்து அதை துண்டுகளாக உடை‌த்து‌க் கொள்ளவும்.

அதே வாணலியில் ரவையைக் கொட்டி வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.

ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு பழம், தக்காளி இவற்றைத் தனித்தனியே சாறு எடுத்து எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.
பழச்சாற்றில் அளவாக தண்ணீர் விட்டு அதை அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும்.

பிறகு வறுத்த ரவையை அதில் கொட்டி கிளறி பாதி வெந்தவுடன் சர்க்கரை சேர்த்து மீதமுள்ள 1 மேஜைக்கரண்டி நெய்யை விட்டு கிளறி பாத்திரத்தில் ஒட்டாமல் வந்ததும் இறக்கிவிடவும்.

தேவையென்றால் 1 தேக்கரண்டி வெனிலா எசன்ஸ் விட்டு நெய் தடவிய தட்டில் பரவலாக கொட்டி, மேலே முந்திரி துண்டுகளை பரவலாக‌ப் போட்டு அலங்கரிக்கவும்.
இதற்குக் கலர், ஏலக்காய் தேவையில்லை.


இதில் மேலும் படிக்கவும் :