மின்ட் கறி (புதினா குழம்பு)

Webdunia|
FILE
புதினா (Mentha spicata) ஒரு மருத்துவ மூலிகையாகும். ஆனால் நாம் உணவின் வாசனைக்காக மட்டும் சேர்த்து வருகிறோம். இதில் அற்புதமான மருத்துவ குணங்கள் உள்ளன. எனவே புதினா குழம்பு தயாரிக்கும் முறையை தெரிந்து கொள்வோம்.

தேவையானவை
பட்டாணி - 100 கிராம்
கேரட் - 100 கிராம்
பீன்ஸ் - 100 கிராம்
பனீர் - 100 கிராம

வதக்கி அரைக்க

புதினா - ஒரு கட்டு
கொத்து மல்லி - அரை கட்டு
கருவேப்பிலை - கால் கட்டுபச்ச மிளகாய் - நான்கு
இஞ்சி - ஒரு லெமென் சைஸ்
பூண்டு - 5 பல்
வெங்காயம் - முன்று
தக்காளி - நன்கு
எண்ணை - ஒரு டேபிள் ஸ்பூன்

செய்முறை

முதலில் எண்ணையை காயவைத்து வெங்காயம், இஞ்சி, பூண்டு, தக்காளி, பச்சை மிளகாயை வதக்கவும்.
கடைசியாக கொத்துமல்லி, புதினா, கருவேப்பிலையை கழுவி அதையும் சேர்த்து வதக்கவும்.
வதக்கியதை ஆறவைத்து மிக்ஸியில் அரைக்கவும்.

எண்ணையை காய வைத்து சீரகம் தாளித்து அரைத்தவற்றை சேர்த்து கொதிக்க விடவேண்டும், அதோடு பனீரையும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
காய்களை பொடியாக அரிந்து மைக்ரோ வேவில் வேகவைத்து எடுத்து கொள்ளவும்.
இப்போது வெந்த காயை சேர்த்து மீண்டும் நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.


இதில் மேலும் படிக்கவும் :