பிரட் சீஸ் பக்கோடா

Webdunia| Last Modified வெள்ளி, 21 டிசம்பர் 2012 (13:40 IST)
பிரட் சீஸ் பக்கோடா ஒரு சிறந்த மாலை நேர சிற்றுண்டி. குழந்தைகளுக்கு ஒரே மாதிரியான சிற்றுண்டிகளை கொடுப்பதற்கு பதிலாக இம்மாதிரியான வித்தியாசமான உணவு வகையை சமைத்து அசத்தலாம்

தேவையானவை

பிரட் - 8 ஸ்லைஸ், சீஸ் - 1 கப், வெங்காயத்தாழ் - 3, பச்சை மிளகாய் - 2,கடலை மாவு - 11/2 கப், உப்பு - தேவைக்கேற்ப, சோடா உப்பு - சிறிது, மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன், மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் ,எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை

சீஸ், நறுக்கிய வெங்காயத்தாழ், நறுக்கிய பச்சை மிளகாய் , தேவையான அளவு உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும்

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, உப்பு, சோடா உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் ஆகிவற்றை தண்ணீர் சேர்த்து மாவாக கரைத்துக்கொள்ளவும்.
ஒரு தவாவில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பிரட் ஸ்லைஸ்களை லேசாக ரோஸ்ட் செய்யவும்.

பிரட் ஸ்லைஸ்கள் ஆறியதும் அவற்றை இரண்டாக வெட்டவும் , சீஸ் கலவையை பிரட் துண்டுகளின் நடுவே வைத்து, மாவு கலவையில் தோய்த்து பொரித்தெடுத்தால் சுவையான பிரட் சீஸ் பக்கோடா தயார்.


இதில் மேலும் படிக்கவும் :