நூடுல்ஸ் ட்ரீட்

Webdunia|
தேவையான பொருட்கள்:

நூடுல்ஸ் 1 பாக்கெட்

தக்காளிப்பழம் 2 பெரியது

வெங்காயம் 1 பெரியது

நூடுல்ஸ் மசாலா 1 பாக்கெட்

சாம்பார்ப்பொடி ஒன்றரை மேஜை கரண்டி

கொத்தமல்லி, கறிவேப்பிலை கொஞ்சம்
பொ‌றி‌த்தெடு‌க்க எண்ணெய்

உப்பு தேவைக்கேற்ப

செய்முறை :

நூடுல்ஸை சூடான எண்ணெயில் கருகாமல் பொரித்து உடைத்துக் கொள்ளவும்.

தக்காளியையும் வெங்காயத்தையும் பொடியாக நறுக்கவும்.
2 மேஜை கரண்டி எண்ணெயை சூடாக்கி வெங்காயத்தை வதக்கவும். தக்காளியைச் சேர்க்கவும். உப்பும் மசாலா பொடியும் சேர்த்து சிறிது நீர் தெளித்து வதக்கவும். கொத்தமல்லி கறிவேப்பிலை சேர்க்கவும்.

அடுப்பை அணைத்து பொறித்த நூடுல்ஸை சேர்க்கவும். கிளறிவிட்டு முழுவதும் ஊறி விடுவத‌ற்குமுன் பரிமாறவும்.


இதில் மேலும் படிக்கவும் :