சேனைக் கிழங்குத் தொக்கு

Webdunia|
சேனைக் கிழங்கு இருநூறு கிராம், இதைத் தோல் போக்கி, சிறு சிறு துண்டுகளாக அரிந்துகொள்ளவும்..

மிளகாய் வற்றல் நூறு கிராம் காம்பு போக்கி எடுத்துக் கொள்ளவும்.

உப்பு அரை ஆழாக்கு, பெருங்காயம் கொட்டைப் பாக்கு அளவு, புளி சிறு எலிமிச்சங்காய் அளவு.

இந்த ஐந்து சாமான்களையும் கல்லுரலில் போட்டு மசிய இடித்து கொள்ளவும்.
பிறகு அரை ஆழாக்கு நல்லெண்ணெயயை ஒரு பாத்திரத்தில் விட்டு காய்ந்ததும், கடுகு ஒரு தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு அரை ஆழாக்கு, இந்த இரண்டையும் போட்டு, உளுத்தம் பருப்புச் சிவந்ததும், கல்லுரலில் போட்டு, உலக்கையால் மசிய இடித்து, சேர்மானம் ஆகும் படி பிசைந்து, சாடியில் எடுத்து கொள்ளவும்.


இதில் மேலும் படிக்கவும் :