கொத்தமல்லி ரோல்ஸ்

Webdunia|
தேவையான பொருட்கள்:

கொத்தமல்லி நறுக்கியது (4 கப்)
கடலை மாவு - 200 ‌கிரா‌ம்
தேங்காய் துருவல் - 1 கப்
கசகசா - 2 டீஸ்பூன்
வெங்காயம் - 1 நறுக்கியது
பச்சை மிளகாய் - 1
உப்பு, தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க
இஞ்சி-பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்

செ‌ய்முறை:
முதலில் கொத்தமல்லியைக் கழுவி சுத்தமாக்கி, அ‌தி‌ல் துருவிய தேங்காயைச் சேர்த்து ‌பி‌ன்ன‌ர் அரிந்த வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி-பூண்டு விழுது, கசகசா சேர்த்து கலவையாக்கி தனியாக வைத்துக்கொள்ளவும்.

கடலைமாவுடன் உப்பு சேர்த்து பிசைந்து, சப்பாத்தியைப் போல திரட்டிக்கொள்ளவும். நடுவில் மேலே கூறிய பூரணத்தை வைத்து நான்காக மடித்துகொள்ளவும். முனைகளை ஒட்டுவதற்கு வெண்ணெயை உபயோகிக்கவும்.
இதை எண்ணெயில் பொரித்து, சுட சுட பரிமாறவும்.

இதனுடன் தக்காளி சாஸ் சேர்த்தும் உண்ணலாம்.

கூடுதல் குறிப்பு: மேலே கூறிய கொத்தமல்லி பூரணத்தை சப்பாத்தி மாவுடன் ஒன்றாக பிசைந்து சப்பாத்திப் போல திரட்டி, மசாலா சப்பாத்தியாகவும் பரிமாறலாம்.


இதில் மேலும் படிக்கவும் :