கேரட் இஞ்சி சூப்

Webdunia| Last Modified ஞாயிறு, 6 ஜனவரி 2013 (17:50 IST)
கேரட் இஞ்சி சூப்பினை காலை நேரத்தில் சாப்பிட்டால் மதிய உணவு சாப்பிடும்வரை பசியே எடுக்காது. வயிற்றுக்கு நிறைவான உணவை அளிக்கும் இந்த சூப்பை செய்து அசத்துங்கள்.

தேவையானவை:

கேரட் - 6
வெங்காயம் - 1
கொத்தமல்லி - சிறிது
இஞ்சி - 1 துண்டு
வெண்ணை - 1 ஸ்பூன்
சோள மாவு - 1/2 ஸ்பூன்
பால் - 1 கப்
உப்பு ,மிளகு தூள் - தேவைகேற்ப
செய்முறை:

வாணலியில் வெண்ணையை சூடேற்றி வெங்காயம், இஞ்சி, கேரட், மற்றும் கொத்தமல்லியை 10 நிமிடங்கள் வதக்கவும்.

சோள மாவினை தண்ணீருடன் கலந்து சேர்க்கவும். இதோடு உப்பு மற்றும் மிளகு தூளை சேர்த்து கலக்கவும்.
இந்த‌க் கலவையை மூடியால் மூடி 10 நிமிடங்கள் வரை சமைக்கவும். இதனோடு பாலை சேர்த்து நன்றாக கொதிவந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி சூடாக பரிமாறவும்.


இதில் மேலும் படிக்கவும் :