கீரை உப்புமா

Webdunia|
தேவையானவை :

புழுங்கல் அரிசி 400 கிராம்

துவரம் பருப்பு 100 கிராம்

கீரை 2 கட்டு

மிளகாய் வற்றல் 12

தேங்காய் 1 மூடி (துருவியது)

கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்க

உப்பு தேவையான அளவு

செய்முறை :

1. புழங்கல் அரிசி, துவரம் பருப்பு முதலியவற்றை ஊற வைத்து, 10 மிளகாய் வற்றல், தேங்காய், உப்பு எல்லாவற்றையும் சேர்த்து, இட்லிக்கு அரைப்பது போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

2. கீரையை, இலைகளை மட்டும் எடுத்து, சுத்தம் செய்து, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொண்டு, அரைத்த மாவுடன் கலக்கவும்.
3. ஒரு தட்டில் எண்ணெய் தடவி, மாவை ஊற்றி ஆவியில் வேக வைக்க வேண்டும்.

4. வெந்ததும் இறக்கி, சூடு ஆறியபின் சிறுசிறு துண்டுகளாக உதிர்த்துக் கொள்ளவேண்டும்.

5. வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல் 2 கிள்ளிப் போட்டு, நறுக்கிய கீரை துண்டுகளைப்போட்டு நன்கு கலக்கவும்.
6. ஐந்து நிமிடம் கழித்து இறக்கி, பரிமாறவும்.


இதில் மேலும் படிக்கவும் :