வெள்ளி, 29 மார்ச் 2024
  1. இதர வாசிப்பு
  2. »
  3. குழந்தைகள் உலகம்
  4. »
  5. பொது அறிவு
Written By Webdunia

‌விடுகதை‌க்கு ‌‌விடை தெ‌ரியுமா?

கீழே கொடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ‌விடுகதைகளு‌க்கு ‌விடை தெ‌ரி‌கிறதா எ‌ன்று பாரு‌ங்க‌ள். தெ‌ரிய‌வி‌ல்லை எ‌ன்றா‌ல் அடு‌த்த ப‌க்க‌ம் பாரு‌ங்க‌ள்.

1. குரலோசை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே?

2. மழையில் பிறந்து வெயிலில் காயுது?

3. நடைக்கு உதாரணம் சொல்வர், குறுக்கே நடந்தால் முகம் சுளிப்பர்?

4. நீண்ட உடம்புக்காரன், நெடுந்தூரப் பயணக்காரன்?

5. மாதத்தின் பெயர்தான், காலையிலேயே விற்பனைக்கு வந்துவிடும்?

6. இரவு வீட்டிற்கு வருவான், இரவு முழுவதும் இருப்பான் காலையில் சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டிருப்பான்?

7. வந்தால் கொண்டாட்டம், வராவிட்டால் திண்டாட்டம்

8. ஆடி ஆடி நடப்பான், அமைதியாக அதிர வைப்பான்?

9. ஒன்று போனால் மற்றொன்றும் வாழாது?

10. பூ கொட்ட கொட்ட ஒன்றையும் தனியே பொறுக்க முடியவில்லை?


விடைகளை அடுத்த பக்கத்தில் காணலாம்.

விடைகள்

1. தொலைபேசி

2. காளான்

3. பூனை

4. ரயில்

5. டிசம்பர்

6. நிலா

7. மழை

8. யானை

9. செருப்பு

10. மழை