‌நிறைய குழ‌ந்தைக‌ள் பெ‌ற்றா‌‌ல் நூறு வயது வாழலா‌ம்!

Webdunia| Last Modified புதன், 14 நவம்பர் 2007 (15:28 IST)
நடு‌த்தரமான உட‌ல்வாகுட‌ன் ‌நிறைய குழ‌ந்தைகளை‌ப் பெ‌றுபவ‌ர்க‌ளு‌க்கு நூறு வயது வாழு‌ம் வா‌ய்‌ப்பு அ‌திக‌ம் எ‌ன்று பு‌திய ஆ‌ய்வு ஒ‌ன்று தெ‌ரி‌வி‌க்‌கிறது.

சி‌க்காகோ ப‌ல்கலை‌க் கழக‌த்‌தி‌ல் ம‌னித‌ர்க‌ளி‌ன் ஆயு‌ள் தொட‌ர்பாக‌ப் படி‌த்து வரு‌ம் லியோடி‌னி‌ட், நடா‌லியா க‌வ்‌ரிலோ‌வ் த‌ம்ப‌தி, நூறு வயது வா‌ழ்வத‌ற்கான வ‌ழிமுறைக‌ள் கு‌றி‌த்து ஆ‌ய்வு நட‌த்‌தின‌ர்.

''கட‌ந்த 1887 ஆ‌ம் ஆ‌ண்டி‌ல் ‌பிற‌ந்து நூறு வயதை‌க் கட‌ந்த 171 ம‌னித‌ர்க‌ள் ஆ‌ய்வு‌க்கு எடு‌த்து‌க் கொ‌ள்ள‌ப்ப‌ட்டன‌ர். ஆ‌ய்‌வி‌‌ல் ‌கிடை‌த்த தகவ‌ல்க‌ள்தா‌ன் ‌விய‌ப்ப‌ளி‌க்‌கி‌ன்றன.
நூறு வயதை‌த் தா‌ண்டியவ‌ர்க‌ள் ‌நிறைய குழ‌ந்தைகளை‌ப் பெ‌ற்று‌ள்ளன‌ர். இ‌தி‌ல் பலரு‌க்கு 30 ஆவது வய‌தி‌ற்கு‌ள் 4 குழ‌ந்தைகளாவது ‌பிற‌ந்து‌ள்ளன.

அனைவரு‌ம் ‌நில‌ங்க‌ளி‌ல் வேலை செ‌ய்து‌ள்ளன‌ர். அ‌திகமாகவு‌ம் இ‌ல்லாம‌ல், குறைவாகவு‌ம் இ‌ல்லாம‌ல் தேவையான அளவு சா‌ப்‌பி‌ட்டு‌ள்ளன‌ர். இதுதா‌ன் அ‌திக நா‌ள் வா‌ழ்வத‌ற்கு மு‌க்‌கிய‌க் காரணமாக இரு‌ந்து‌ள்ளது.
உட‌ல்வாகை‌ப் பொறு‌த்தவரை நூறு வயதை‌த் தா‌ண்டியவ‌ர்க‌ள் அ‌திக பருமனாகவு‌ம் இ‌ல்லை. ஒ‌ல்‌லியாகவு‌ம் இ‌ல்லை. நடு‌த்தர உட‌ல்வாகை‌ப் பெ‌ற்று‌ள்ளன‌ர்'' எ‌ன்று ‌லியோ‌டி‌னி‌ட் கூ‌றினா‌ர்.

''நடு‌த்தர உடலுட‌ன் இரு‌ப்பவ‌ர்க‌ள் ‌நீ‌ண்டநா‌ட்க‌ள் வா‌ழ்வா‌ர்க‌ள் எ‌ன்ப‌து எ‌ங்க‌ளி‌ன் க‌ணிப்புதா‌ன். அத‌ற்காக பருமனான உட‌ல்வாகை‌ப் பெ‌ற்றவ‌ர்க‌ள் அ‌ச்ச‌ப்பட வே‌ண்டா‌ம். ந‌ல்ல உட‌ல்நல‌ம்தா‌ன் ‌நீ‌ண்ட ஆயுளை‌க் கொடு‌க்கு‌ம்'' எ‌ன்று‌ம் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.


இதில் மேலும் படிக்கவும் :