விடை சொல்லுங்கள் குழந்தைகளா!

Webdunia|
விடுகதைக‌ள் உ‌ங்களு‌க்காக கொடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. படி‌த்து பா‌ர்‌த்து ‌விடை தெ‌ரி‌ந்தா‌ல் சபா‌ஷ‌் போ‌ட்டு‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். இ‌ல்லையெ‌ன்றா‌ல் அடு‌த்த ப‌க்க‌த்‌தி‌ல் படி‌த்து ம‌ற்றவ‌ர்களை‌க் கே‌ட்டு அச‌த்து‌ங்க‌ள்.

1. வம்புச்சண்டைக்கே இழுத்தாலும் வாசல் தாண்டி வர மாட்டான் அவன் யார்?

2. உலகமே உறங்கினாலும் அவர்கள் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் யார்?

3. இரவும் பகலும் ஓய்வில்லை. அவன் உறங்கிவிட்டால் எழுப்ப ஆளே இல்லை. அவன் யார்?
4. கூடவே வருவான் உளவாளி அல்ல, விழுந்தே கிடப்பான் சோம்பேறி அல்ல. அவன் யார்?

5. கருப்பன்தான் ஆனால் பலரின் உயிர் கொடுப்பான். அவன் யார்?

6. பெரிய சிக்கலான நூல். பிரித்தெடுக்க முடியாவிட்டாலும் சுவையானவன். அவன் யார்

7. அந்தரத்தில் தான் தொங்குவான் அவனுக்கு ஆயிரம் பேர் காவல்.
8. உலர்ந்த காம்பில் மலர்ந்த கருப்பு பூ, அவன் யார்

9. கறுப்பர்கள் ஆண்டு பல காலம் ஆனதும் வெள்ளையர் ஆதிக்கம் ஆரம்பம். அது என்ன?

10. காலையில் வருவான், மாலையில் போவான், இரவு தங்க மாட்டான் அவன் யார்?

விடைகளை ‌நீ‌ங்களே க‌ண்டு‌பிடி‌த்‌திரு‌ப்‌பீ‌ர்க‌‌ள். எ‌ங்களு‌க்கு‌த் தெ‌ரியு‌ம்... இரு‌ந்தாலு‌ம் ஒரு முறை ச‌ரிபா‌ர்‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்கேள‌ன்
விடைக‌ள் அடு‌த்த ப‌க்க‌த்‌தி‌ல்


இதில் மேலும் படிக்கவும் :