விடுகதை

Webdunia|
1. சின்னச் சின்ன சாத்தான் வயிறு பெருத்துச் செத்தான். அவன் யார்? ( பருத்திக் கொட்டை )

2. சின்னக் குதிரைக்கு நூறு கடிவாளம். அது என்ன? ( தறி )

3. சிவப்புப் பைக்குள் சில்லறை கொட்டிக் கிடக்குது அது என்ன?
( மிளகாய் )

4. குதிரை ஓட, ஓட வால் குறைகிறது அது என்ன?( ஊசியும், நூலும் )

5. ஓடுமாம், சாடுமாம் ஒற்றைக் காலில் நிற்குமாம் அது என்ன? ( கதவு )

6. கால் இல்லாத மான் ; வேர் இல்லா புல்லைத் தின்னும் அது என்ன? ( மீன், பாசி )
7. கால் நான்கு நடக்காது, கண் ஆயிரம் இமைக்காது. அது என்ன? ( கட்டில் )


8. செய்ததைச் செய்யும் குரங்கும் அல்ல, சிங்காரிக்க உதவும் சீப்பும் அல்ல. . . அது என்ன? ( கண்ணாடி )
9. டாக்டர் வந்தார், கோட்டைக் கழற்றினார், கேணிக்குள் குதித்தார்! அது என்ன? ( வாழைப் பழம் )

10. மேலே பூப்பூக்கும், கீழே காய்காய்க்கும். அது என்ன? ( வேர்க்கடலை )


இதில் மேலும் படிக்கவும் :