வள‌ர்‌ப்பு நா‌ய்களு‌க்கு சா‌க்லே‌ட் ஆப‌த்து!

Webdunia| Last Modified திங்கள், 10 டிசம்பர் 2007 (17:27 IST)
'வீடுக‌ளி‌ல் வள‌ர்‌ப்பு நா‌ய்களு‌க்கு‌ச் சா‌க்லே‌ட் கொடு‌ப்பது அத‌ற்கு ‌விஷ‌ம் வை‌த்து‌க் கொ‌ள்வத‌ற்கு‌ச் சம‌ம்' எ‌ன்று மரு‌த்துவ‌ர்க‌ள் எ‌‌ச்ச‌ரி‌த்து‌ள்ளன‌ர்.

சா‌க்லே‌ட் தயா‌ரி‌ப்‌‌பி‌ல் மு‌க்‌கிய மூல‌ப் பொருளான கோகோ ‌விதை‌யி‌ல் ‌தியோபுரோ‌மி‌ன் எ‌ன்ற புரத‌ம் உ‌ள்ளது. இ‌ப்புரத‌ம் நா‌ய்க‌ளி‌ன் ம‌த்‌திய நர‌ம்பு ம‌ண்டல‌த்தையு‌ம், இத‌ய‌‌த்‌தி‌ன் தசைகளையு‌ம் கடுமையாக பா‌தி‌க்‌கிறது எ‌ன்று ‌பி‌ரி‌ட்ட‌ன் கா‌ல்நடை மரு‌த்துவ‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.
தியோபுரோ‌மி‌ன் புரத‌த்தை செ‌ரி‌க்கு‌ம் ச‌க்‌தி ம‌னித‌ர்களு‌க்கு‌ம் பூனைகளு‌க்கு‌ம் உ‌ள்ளது. ஆனா‌ல் நா‌‌யி‌ன் செ‌ரிமான ம‌ண்டல‌‌த்‌தி‌ற்கு அ‌ந்த‌ச் ச‌‌க்‌தி இ‌‌ல்லை.

இதனா‌ல், சா‌க்லே‌ட் சா‌ப்‌பி‌ட்ட நா‌ய்களு‌க்கு வா‌ந்‌தி, பே‌தி, வ‌யி‌ற்றெ‌ரி‌ச்ச‌ல், மூ‌ச்சு‌த் ‌திணற‌ல் உ‌ள்‌ளி‌ட்ட ப‌ல்வேறு கோளாறுக‌ள் ஏ‌ற்படு‌ம்.
இ‌ந்த பா‌தி‌ப்‌பி‌ன் த‌ன்மை, சா‌க்லே‌ட்டி‌ன் வகை ம‌ற்று‌ம் அளவை‌ப் பொரு‌த்தது. அட‌ர்‌த்‌தியான ‌விலை அ‌திகமான சா‌க்லே‌ட்டுக‌ளி‌ல் ‌தியோபுரோ‌மி‌ன் அ‌திகமாக உ‌ள்ளது.

எனவே ‌விழா‌க் கால‌ங்க‌ளி‌ல் நா‌ய்களு‌க்கு வேறு வகையான உணவுகளை‌ப் ப‌ரிச‌ளியு‌ங்க‌ள். ‌கி‌‌றி‌ஸ்தும‌ஸ் அ‌ன்று சா‌க்லே‌ட் கல‌க்காத கே‌க்குகளை உ‌ண்ண‌க் கொடு‌ங்க‌ள்.


இதில் மேலும் படிக்கவும் :