மாணவர்களுக்கான ஓவியப்போட்டி, மாறுவேடப்போட்டி

Webdunia|
நேரு பிறந்தநாள், குழந்தைகள் தினம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து கொண்டாடும் விதத்தில் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு ஓவியப்போட்டி, மாறுவேடப்போட்டி ஆகியவை நவம்பர் 14-ந்தேதி நடத்தப்பட உள்ளது.

சமுதாய ஆ‌ர்வல‌ர் சரோஜினி வரதப்பனா‌ல் ‌நி‌ர்வ‌கி‌க்க‌ப்ப‌ட்டு வரு‌ம் மைலப்பூர் அகடமி சா‌ர்‌பி‌ல் இ‌ந்த போ‌ட்டி நடைபெற உ‌ள்ளது.

அகடமியின் கவுரவ செயலாளர் வீரராகவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், போட்டிகள் 14-ந்தேதி காலை 9 மணிக்கு மைலாப்பூரில் உள்ள பி.எஸ்.மேல்நிலைப்பள்ளியில் தொடங்குகிறது. இதில் வயது வரம்பு இன்றி அனைத்து வயது மாணவர்களும் கலந்து கொள்ளலாம்.
விவரங்களுக்கு ராஜா அண்ணாமலைபுர‌ம், சிருங்கேரி மடம் ரோட்டில் உள்ள மைலாப்பூர் அகடமியில் உள்ள கவுரவ செயலாளர்களை அணுகலாம் எ‌ன்று குறிப்பிடப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :