ஒரு குழந்தையின் ஜாதகம் எப்போது அதன் பெற்றோருக்கு பலன் தரும்?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:

Webdunia|
பொதுவாக கருவில் இருக்கும் போதே (ஏறக்குறைய 100 நாட்களுக்குப் பின்னர்) குழந்தையின் ஜாதகம் பலன்தரத் துவங்கி விடும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

ஆனால் ஒரு சிலர், குழந்தைக்கு 3 வயது முடிந்த பின்னரே ஜாதகம் பார்க்க வேண்டும். அப்போதுதான் அது பலனளிக்கும் எனக் கூறுவது உண்டு. குழந்தை பிறந்த நேரம் சரியில்லாமல் இருந்தால், பெற்றோருக்கும், குழந்தைக்கும் இடையிலான பாசப் பிணைப்பு குறைந்துவிடும் என்பதால் அப்படிக் கூறுகின்றனர்.

ஒரு சில பெற்றோர், கரு உருவாகும் சமயத்தில் சாதாரண நிலையில் இருந்தாலும், குழந்தை பிறக்கும் நேரத்தில் அவர்கள் பொருளாதார ரீதியாக நல்ல நிலைக்கு உயர்ந்து விடுவர். எனக்குத் தெரிந்த ஒருவர் வாடகை வீட்டில் வசித்து வந்தார். வாடகை வீட்டில் இருந்த காலத்தில் அவரது மனைவி கர்ப்பம் தரித்தார்.
பிரசவம் முடிந்து தாயும், சேயும் நலமாக வீடு திரும்பினர். அவர்கள் முன்பு வசித்த வாடகை வீட்டிற்கு அல்ல... புதிதாக அவர்கள் கட்டிய சொந்த வீட்டிற்கு. இதுபோன்ற சிறப்பான யோகங்களையும் ஒரு சில குழந்தைகளின் ஜாதகம் கொடுக்கும். ஆனால் குழந்தை உருவான நேரம் சிறப்பாக இல்லாவிட்டால் மேற்கூறியதற்கு நேர்மாறான பலன்கள் உருவாவதும் உண்டு.
பொதுவாக பெற்றோருக்கு நல்ல தசாபுக்தி, அந்தரம் இருக்கும் காலகட்டத்தில் உருவாகும் குழந்தைகள், மிகப்பெரிய யோகம் உள்ளதாகவும், அறிவாளியாகவும், அதிர்ஷ்டசாலியாகவும் இருக்கும். ஆனால், பெற்றோருக்கு ஜாதகம் சரியில்லாத நேரத்தில் உருவாகும் குழந்தைகள் நோயாளியாகவும், அதிர்ஷ்டமற்றதாகவும் இருக்கும் என நூல்கள் கூறுகின்ற
குறைபாடு உள்ள குழந்தைகள் பிறப்பதற்கு பெற்றோரின் ஜாதகமே பெரும்பாலும் காரணமாகி விடுகிறது. குறைப்பிரசவத்தில் குழந்தைகள் பிறக்கவும் இதுவே காரணம்.


இதில் மேலும் படிக்கவும் :