திருவண்ணாமலையில் ஏற்றக்கூடிய தீபம் மிகச் சிறப்பு மிக்க தீபம். கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் ஏற்றக்கூடிய தீபம். கார்த்திகை மாதம் என்பதே ஒரு சிறப்பு மிக்க மாதம். ஏனென்றால், இந்தக் கார்த்திகை மாதத்தில்தான் நம்முடைய உடம்பில் உள்ள நாடி, நரம்புகளெல்லாம் சம ஓட்டத்தில் இருக்கும் என்று சொல்வார்கள். அப்படி நாடி நரம்புகள் சம ஓட்டத்தில் இருக்கும் போது தியானம் செய்யாதவர்களுக்கும் ஞானம் சித்தியாகும். | Karthigai Deepam, Thiruvannamalai, Vidhyadharan