வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
Written By K.N.Vadivel

தமிழ்த்தாய் சிலை எங்கே? கருணாநிதி கேள்வி

தமிழ்த்தாய் சிலை எங்கே? கருணாநிதி கேள்வி

மதுரையில் ரூ. 100 கோடியில் தமிழ்த்தாய் சிலை எங்கே இருக்கிறது என எனக்கு தெரியவில்லை என திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
 

 
மதுரையில், திமுக தலைவர் கருணாநிதி திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி கூட்டணி
வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரக் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
 
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமை கொண்டது  மதுரை. இந்த மதுரையில், 100 ரூபாய் கோடியில் தமிழ்த்தாய்க்கு சிலை வைக்கப்படும் என ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். அந்த சிலை இப்போது எங்கே இருக்கிறது என எனக்கு தெரியவில்லை. இது போன்ற பொய் மூட்டைகளை ஜெயலலிதா அவிழ்த்து விட்டு கடந்த 5 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி வருகிறார்.
 
அவரின் பொய் மூட்டைகளுக்கு எல்லையே இல்லாமல் போய்விட்டது. இதற்குமேல் ஜெயலலிதாவை நம்பினால், நீங்கள் தான் ஏமாந்து போவீர்கள்.
 
மதுரை மக்கள் நலன் கருதியே சேது சமுத்திர திட்டம் கொண்டுவரப்படும். எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும். ஒரு சிலர் ராமர் மீது பழி போட்டு சேது சமுத்திர திட்டத்தை முடக்க முயற்சி செய்கின்றனர்.
 
கரூரில் அதிமுக பிரமுகர் அன்புநாதனிடம் கைப்பற்றப்பட்ட பணம் குறித்து மத்திய அரசு மவுனமாக உள்ளது. ஊழலின் பிறப்பிடமாக தற்போதைய அதிமுக ஆட்சி உள்ளது.
 
மக்களை பற்றி கவலைப்படாத அரசாக தற்போதைய அதிமுக ஆட்சி செயல்பட்டு கொண்டிருக்கிறது. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் கிரானைட் ஊழல் வழக்கு வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படும் என்றார்.