வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
Written By Suresh
Last Updated : புதன், 13 ஏப்ரல் 2016 (12:59 IST)

பிற கட்சி எம்.எல்.ஏக்கள் விலைக்கு வாங்கப்படுகிறார்கள்: ஜி.ஆர் கண்டனம்

பிற கட்சி எம்.எல்.ஏக்களை சந்திரபாபு நாயுடு விலைக்கு வாங்குகிறார் என்று மார்க்ஸிட்டு கம்யூனிஸ்ட்டு கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.


 

 
ஆந்திர மாநிலத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து 11 எம்.எல்.ஏக்கள், தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தனர்.
 
இது குறித்து ஜி.ராமகிருஷ்ணன் கூறியதாவது:–
 
தெலுங்கானா மாநிலத்தில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏக்கள், சந்திரசேகரராவின் கட்சியில் இணைந்தபோது சந்திரபாபு நாயுடு கொதிப்படைந்தார். தனது கட்சி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி விட்டார்கள் என்று குற்றம் சாட்டினார்.
 
அது போலதான் சந்திரபாபு நாயுடுவும் பிற கட்சி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குகிறாரா? யுகாதி பண்டிகை அன்று ஆளும் கட்சியினர் மக்களுக்கு நல்ல செய்தியை சொல்ல வேண்டும்.
 
ஆனால், அன்று சந்திரபாபு நாயுடு மற்ற கட்சி எம்.எல்.ஏ.வை இழுத்து தன்கட்சியில் சேர்த்திருக்கிறார்.
 
நடிகர் பவன்கல்யாண் கடந்த தேர்தலில் ஜனசேனா கட்சியை தொடங்கினார். தெலுங்குதேசம் - பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.
 
அந்த பிரசாரத்தின் போது பிரதமர் நரேநிதிர மோடி, பவன் கல்யாண் அருகில் இருக்கும் போதுதான் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.
 
அது இன்னும் நிறைவேற்றப்படவில்லை.அது பற்றி கேட்காமல் பவன் கல்யாண் தூங்கிக் கொண்டிருக்கிறார்.
 
ஆனால் 2019 ஆம் ஆண்டு தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என்று சொல்லி இருக்கிறார். இதைக் கேட்டு மக்கள் சிரிக்கிறார்கள். இவ்வாறு ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.