வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
Written By Suresh
Last Updated : வெள்ளி, 8 ஏப்ரல் 2016 (13:33 IST)

10 ஆம் தேதி வெளியாகிறது திமுக தேர்தல் அறிக்கை: விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

திமுக தேர்தல் அறிக்கை ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் என்று அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


 

 
இது குறித்து மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
 
திமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்று உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
 
இதே போல இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் எவை என்பது தொடர்பாகவும் முடிவு எட்டப்பட்டுள்ளது.
 
10 ஆம் தேதி (நாளை மறு நாள்) திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். அன்று மாலை 6 மணிக்கு அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் திமுக தலைவர் கருணாநிதி தேர்தல் அறிக்கையை வெளியிடுவார். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
கடந்த தேர்தலில் இலவசங்கள் தொடர்பான பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில், தற்போது மக்கள் எதிர்பார்க்கும் வேலையில்லா திண்டாட்டம், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள், விவசாய பிரச்சினைகள் உள்ளிட்டவை இடம் பெருமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவுகின்றது.