ஸ்ரீரங்கப்பட்டினத்திற்கு போகலாம்

palac3
webdunia photoWD
இந்த கோட்டைக்குச் சென்று அங்குள்ள வரலாற்றுப் பெருமைகளை எடுத்துரைக்க சுற்றுலா வழிகாட்டிகளும் உள்ளனர்.

திப்பு சுல்தான், பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராக போரிட்ட களமும் நமது வரலாற்றுப் பெருமைகளை தாங்கி நிற்கிறது.

திப்பு மற்றும் ஹைதர் அலியின் வரலாற்றுச் சிறப்புகள் மட்டுமல்ல, ஸ்ரீரங்கப் பட்டினத்தில் அ‌திக அள‌விலான தூ‌ண்களை‌க் கொ‌ண்ட ரங்கநாதர் ஆலயமும் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

வார விடுமுறையைக் கழிக்கும் விதத்தில் செல்லும் ஒரு சுற்றுலாவிற்கு ஸ்ரீரங்க‌ப்ப‌ட்டின‌ம் ஏற்ற இடமாகும்.

காலையில் கிளம்பினால் ஸ்ரீரங்க‌ப்ப‌ட்டின‌ம் கோட்டையைச் சுற்றிப்பார்த்து முடிக்க அரை நாட்கள் ஓடி விடும். அங்கிருந்து திப்பு சுல்தான் காலத்தில் கட்டப்பட்ட ஜமா மசூதியையும் ஒரு முறைப் பார்த்துவிட்டு வாருங்கள்.

அங்கிருந்து திப்பு சுல்தானின் கோடைக்கால மாளிகையைக் காண செல்லுங்கள். தரியா தெளலத் பாக் என்ற அந்த மாளிகை முழுவதும் மரத்தால் கட்டப்பட்டிருக்கும்.

Webdunia|
காவிரி நதிக்கரையில் அமைந்திருக்கும் ஒரு அழகிய வரலாற்று சிறப்பு மிக்க நகரம் தான் ஸ்ரீரங்கப்பட்டினம்.
ஸ்ரீரங்க‌ப்ப‌ட்டினத்தின் ஒவ்வொரு மூலைக்கும் ஒரு வரலாற்று கதை இருக்கும்.ஒரு காலத்தில் மைசூரை ஆண்டு வந்த திப்பு சுல்தானின் தலைநகரமாக இந்த ஸ்ரீரங்க‌ப்ப‌ட்டின‌ம் விளங்கியது. அந்த காலத்தில் திப்பு சுல்தானின் மாளிகையாக விளங்கிய பரந்து விரிந்த கோட்டை இன்றளவும் கம்பீரமாக நின்று கொண்டு நம்மை வரவேற்று அதிசயிக்க வைக்கிறது.


இதில் மேலும் படிக்கவும் :