1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Modified: வெள்ளி, 23 மே 2014 (12:56 IST)

‌சிவகா‌ர்‌த்‌திகேய‌ன், முருகதா‌ஸ் கோ‌ர்‌ட்டி‌ல் ஆஜராக உத்தரவு

சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் படம் மான் கராத்தே‌யி‌ல் நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருந்தார். குத்து சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்தை இயக்குனர் திருக்குமரன் இயக்கியிருந்தார். 
காமெடிக்காக எடுக்கப்பட்ட இந்த படத்தில், உலகப் புகழ் வாய்ந்த குத்துச சண்டை போட்டியை கேலியும், கிண்டலும் பண்ணும் விதமாக நிறைய காட்சிகளில் வசனம் வருவதாக கூறி, ஜெ.எம். என்ற பெயரில் பாக்சிங் கிளப் நடத்தி வரும் கிருஷ்ணமூர்த்தி என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 
 
இதை விசாரித்த நீதிபதி, படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயன், இயக்குனர். திருக்குமரன், வில்லன் நடிகர் கிருஷ்ண வம்சி, படத்தை தயாரித்திருக்கும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர்களை கோர்ட்டில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உத்திரவிட்டுள்ளார். 
 
அதனால், தங்கள் தரப்பு வாத்ததை எடுத்து சொல்ல, வக்கீலிடம் ஆலோசனை கேட்டு வருகின்றனர் மான் கராத்தே குழுவினர்.