வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Modified: வெள்ளி, 25 ஜூலை 2014 (16:38 IST)

ஹைதராபாத்தில் லிங்காவுக்காக பிரமாண்ட அரங்கு

ஹைதராபாத் அன்னபூர்ணி ஸ்டுடியோவில் லிங்கா பாடல் காட்சிக்காக பிரமாண்ட அரங்கு அமைக்கப்பட்டு அதில் ரஜினி, அனுஷ்காவின் நடனத்தை கே.எஸ்.ரவிக்குமார் படமாக்கினார். 
 
லிங்காவின் பெரும்பாலான காட்சிகள் - முக்கியமாக சரித்திரக் காட்சிகள் ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஹைதராபாத் அன்னபூர்ணி ஸ்டுடியோவுக்கு படப்பிடிப்பு மாற்றப்பட்டது. சென்ற வாரம் அங்கு பிரமாண்ட அரங்கு அமைக்கப்பட்டது. பாடல் காட்சியை படமாக்குவதற்காக அந்த அரங்கு அமைக்கப்பட்டது.
ரஜினி, அனுஷ்கா இடம்பெறும் அந்தப் பாடல் காட்சிதான் தற்போது அங்கு படமாக்கப்பட்டு வருகிறது. இந்த ஷெட்யூலுடன் அனுஷ்கா சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிந்துவிடும் எனவும் கூறப்படுகிறது.
 
லிங்கா இரு காலகட்டங்களில் பயணிக்கும் கதை. ரஜினி தாத்தா, பேரன் என இரு வேடங்களில் வருவதாக கூறப்படுகிறது. சரித்திர காலகட்டத்தைச் சேர்ந்த ரஜினிக்கு சோனாக்ஷி சின்காவும், நிகழ்காலத்து ரஜினிக்கு அனுஷ்காவும் ஜோ‌டியாக நடிக்கின்றனர். இதில் சோனாக்ஷி சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட்டுவிட்டன.
 
ரஹ்மான் இசையில் ரத்னவேலு ஒளிப்பதிவு செய்யும் லிங்காவை ராக் லைன் வெங்கடேஷ் தயாரிக்கிறார்.
 
12-12-14 ரஜினியின் பிறந்தநாள் அன்று படத்தை வெளியிடுகின்றனர்.