1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Modified: செவ்வாய், 29 ஜூலை 2014 (15:16 IST)

ஸ்ரீதேவி இல்லை - ஜீத்து ஜோ‌சப் உறுதி

த்ரிஷ்யம் தமிழ் ரீமேக்கில் ஆஷா சரத் நடித்த ஐபிஎஸ் வேடத்தில் ஸ்ரீதேவி நடிப்பார் என சில ஊடகங்கள் (நாம் அல்ல) தெரிவித்திருந்தன. அதனை படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோ‌சப் மறுத்துள்ளார்.
மலையாள த்ரிஷ்யத்தில் ஐபிஎஸ் வேடத்தில் ஆஷா சரத் நடித்திருந்தார். த்ரிஷ்யத்தின் கன்னட ரீமேக்கிலும் அந்த வேடத்தை ஆஷா சரத்தே செய்திருந்தார். அதில் அவரது கதாபாத்திர பெயர் ரூபா ஐபிஎஸ்.
 
தமிழிலும் அவரையே நடிக்க வைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழில் அவரது பெயர் சீதா ஐபிஸ். இந்தத் தகவலை நாம் ஏற்கனவே தெரிவித்திருந்தோம். இந்நிலையில் சில ஊடகங்கள் ஆஷா சரத் நடித்த ஐபிஎஸ் கதாபாத்திரத்தை தமிழில் செய்யப் போகிறவர் ஸ்ரீதேவி என எழுதின. அதனை ஜீத்து ஜோ‌சப் மறுத்துள்ளார்.
தமிழ் ரீமேக்கில் கமல் நடிப்பது மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மலையாளத்தில் நடித்த அதே வேடத்தை தமிழில் ஆஷா சரத் செய்கிறார். வேறு நடிகர்கள் யாரும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
 
இந்தப் படத்தில் கமலின் மனைவியாக கௌதமி நடிப்பார் என கூறப்பட்டது. ஜீத்து ஜோ‌சப் அது குறித்து எதுவும் தெரிவிக்காததால் கௌதமி நடிப்பதும் கேள்விக்குறியாகி உள்ளது.