1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Updated : புதன், 18 ஜூன் 2014 (15:04 IST)

வேலையில்லாப் பட்டதாரியை வெளியிடும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன்

தனுஷின் வுண்டர்பார் தயாரித்திருக்கும் வேலையில்லா பட்டதாரியின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் வாங்கியுள்ளார்.
 
எதிர்நீச்சல் படத்தை தயாரித்த தனுஷின் இரண்டாவது தயாரிப்பு வேலையில்லா பட்டதாரி. இதில் தனுஷே நாயகனாக நடித்துள்ளார். ஆக்ஷன், காமெடி, காதல், சென்டிமெண்ட் என அனைத்தும் கலந்த கமர்ஷியல் படம் இது.
அமலா பால் ஹீரோயின். அனிருத் படத்துக்கு இசையமைத்துள்ளார். பாடல்கள் அட்டகாசமாக வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தை இயக்கியிருப்பவர் தனுஷின் பொல்லாதவன், ஆடுகளம் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கேமராமேன் வேல்ராஜ். இயக்குனராக இது அவருக்கு முதல் படம்.
 
மரியான் உள்ளிட்ட தனுஷின் சமீபகால படங்கள் சரியாகப் போகவில்லை. கண்டிப்பாக ஒரு ஹிட் தேவை என்ற நிலையில் இருக்கிறார். வேலையில்லா பட்டதாரி அந்த தேவையை நிறைவு செய்யும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உள்ளது. எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் படத்தை விநியோகிக்க முன் வந்திருப்பது அந்த நம்பிக்கையை வலுப்படுத்துகிறது.
 
தனுஷின் வுண்டர்பார் தற்போது சிவ கார்த்திகேயன் நடிக்கும் டாணா படத்தையும் தயாரித்து வருகிறது.