வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha priya
Last Modified: சனி, 26 ஜூலை 2014 (11:03 IST)

வெங்கட்பிரபுவின் மாஸ் - சூர்யாவுடன் நடிக்கும் பார்த்திபன்

வெங்கட்பிரபுவின் மாஸ் படத்தில் பார்த்திபன் நடிப்பது உறுதியாகியிருக்கிறது.
பிரியாணிக்குப் பிறகு மீண்டும் ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் படத்தை வெங்கட்பிரபு இயக்குகிறார். சூர்யா ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் நயன்தாரா, எமி ஜாக்சன் என்று இரு ஹீரோயின்கள். யுவன் இசையமைக்க ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். மாஸ் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் பார்த்திபன் முக்கிய வேடமேற்கிறார்.
 
அஞ்சான் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் சூர்யாவுடன் நடிப்பது குறித்து பார்த்திபன் தெரிவித்தார். பொதுவாக ஒரு நடிகர், நீங்க என்னோட படத்தில் நடிக்கிறீங்க என்றுதான் சொல்வார்.

ஆனால் சூர்யா என்னை தேடி வந்து, சார் உங்களுடன் நான் நடிக்கப் போறேன் என்றார் என சூர்யாவின் பணிவைப் பற்றி குறிப்பிட்டார். 
 
சூர்யாவுடன் நடிப்பது பற்றி குறிப்பிட்ட பார்த்திபன் எந்தப் படம் என்பதை கூறவில்லை. அது வெங்கட்பிரபுவின் மாஸ் படம் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
பார்த்திபன் எழுதி இயக்கியிருக்கும் கதை திரைக்கதை வசனம் வருகிற ஆகஸ்ட் ஒன்று திரைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.