வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Modified: செவ்வாய், 2 செப்டம்பர் 2014 (18:37 IST)

மார்பிங் நிர்வாணப் படம் - தமன்னா ஆவேசம்

நடிகைகளின் படத்தை நிர்வாண பெண்ணின் படத்துடன் மார்பிங் செய்து இணையத்தில் உலவவிடுவதை சில விஷமிகள் தொடர்ந்து செய்து வருகின்றனர். இந்த மார்பிங் நிர்வாணத்துக்கு தப்பித்த நடிகைகள் சொற்பம்.
தமன்னாவையும் இப்படி மார்பிங்கில் நிர்வாணமாக காட்டியுள்ளது ஒரு கும்பல்.
 
தமன்னாவின் புகைப்படத்தில் இருந்து தலையை மட்டும் எடுத்து நிர்வாணப் பெண்ணின் உடம்பு மீது ஒட்ட வைத்து இணையத்தில் உலவவிட்டுள்ளனர். இந்த விஷயம் தமன்னாவையும் எட்டியுள்ளது.
 
என்னுடைய படத்தையும் மார்பிங் மூலம் நிர்வாணப் பெண் உடலுடன் இணைத்து வெளியிட்டுள்ளனர். ஆனால் இதற்காக நான் புகார் தரப்போவதில்லை. தந்தால் விஷயம் பெரிதாகிவிடும். அதற்காக இதனை நான் ஆதரிக்கிறேன் என்று அர்த்தமில்லை. இப்படிப்பட்ட புல்லுருவிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று ஆவேசமாக கூறியுள்ளார்.