வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By John
Last Modified: புதன், 9 ஏப்ரல் 2014 (11:40 IST)

மலையாள கரையோரம் ஒதுங்கிய லட்சுமி மேனன்

மலையாள சினிமாவில் துணை நடிகைகளாக கருதப்பட்ட பலரும் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளாக கொண்டாடப்படுவதுண்டு. அப்படி தமிழ், தெலுங்கு சினிமாக்களால் பிரபலமான பிறகே மலையாள சினிமாவில் ஹீரோயின் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்துள்ளது.
2011 ல் ரகுவின்டெ சொந்தம் ரசியா படத்தில் சின்ன வேடத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் லட்சுமி மேனன். அந்த வருடம் அவருக்கு கிடைத்தது இந்த ஒரு படம் மட்டுமே. 2012 -ல் மேலுமொரு படம், ஐடியல் கப்பிள். அதிலும் சின்ன வேடம்தான். தொடர்ந்து மலையாளத்தில் நடித்திருந்தால் லட்சுமி மேனன் இப்போது நல்ல துணை நடிகையாக இருந்திருப்பார்.
 
ஆனால் அவரின் அதிர்ஷ்டரேகை வேறு மாதிரி இருந்தது.
 
சசிகுமார் லட்சுமி மேனனை சுந்தரபாண்டியனில் ஹீரோயினாக்கினார். அதற்குள் பிரபுசாலமனின் கும்கி வெளிவந்தது. லட்சுமி மேனன் பெரிய ஸ்டாரானார். குட்டிப்புலி, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், ஜிகிர்தண்டா, சிப்பாய், மஞ்சப்பை, வசந்தகுமாரன்... என்று அடுத்தடுத்து வாய்ப்புகள். இதற்கு பிறகுதான் லட்சுமி மேனனை ஹீரோயினாக மலையாளத்தில் அங்கீகரித்துள்ளனர். முதலிரு படங்களுடன் தமிழுக்கு வந்தவர் இப்போதுதான் மீண்டும் மலையாள சினிமாவில் நடிக்க உள்ளார்.
 
ஜோஷி இயக்கத்தில் திலீப் நடிக்கும் அவதாரம் படத்தில் லட்சுமி மேனனை கமிட் செய்துள்ளனர். 
 
சொந்த மொழியில் நடிக்கும் பரவசத்தில் தமிழ் சினிமா மோசம், அங்கு கமர்ஷியல் மட்டும்தான், மலையாள சினிமாதான் பேஷ்.. பேஷ்... ரொம்ப நன்னாயிருக்கு என்று நீங்களும் சொல்லிடாதீங்க.