வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Modified: திங்கள், 28 ஜூலை 2014 (11:29 IST)

நான் இனி ஜனனி அய்யர் கிடையாது, வெறும் ஜனனி

நடிகை ஜனனி அய்யர் இனி தனது பெயர் ஜனனி மட்டுமே, அய்யர் கிடையாது என அறிவித்துள்ளார்.
 
கேரளாவில் சாதியை தங்கள் பெயருடன் சேர்த்துக் கொள்வது சாதாரணமாகப் பார்க்கக் கூடியது. நடிகர், நடிகைகள் சிலரும் தங்களின் பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரை பட்டம் போல் சேர்த்து கொண்டிருக்கிறார்கள். நவ்யா நாயர், அனூப் மேனன்... இப்படி.
நடிகை ஜனனியும் இதுவரை ஜனனி அய்யர் என்றே அறியப்பட்டு வந்தார். தெகிடி படத்திலும் ஜனனி அய்யர் என்றே அவரது பெயர் இடம்பெற்றிருக்க வேண்டும். தவறுதலாக கடைசி நேரத்தில் அய்யர் இல்லாமல் வெறும் ஜனனி என டைட்டிலில் இடம்பெற்றது. 
 
அவன் இவன் படத்துக்குப் பிறகு ஜனனி அய்யர் நடித்தப் படங்களில் தெகிடிதான் ஓரளவும் வசூலும், பெயரும் சம்பாதித்து தந்தது. அந்த அதிர்ஷ்டம் அப்படியே தொடரும் ஆசையில் தெகிடி டைட்டிலில் இடம் பெற்ற அய்யர் இல்லாத ஜனனியை இனி தொடர்ந்து பயன்படுத்தலாம் என்று தீர்மானித்துள்ளார். இனி ஜனனி அய்யரை ஜனனி என்றே எழுதவும். படங்களிலும் அப்படியே அவரது பெயர் இடம்பெறும்.
 
சாதியை களைந்தால் மட்டுமே அதிர்ஷ்டமும் அருகில் வரும்போல.