வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Modified: திங்கள், 4 ஆகஸ்ட் 2014 (11:17 IST)

சுராஜ் படத்தில் ஜெயம் ரவியுடன் நடிக்கும் த்ரிஷா

சுராஜ் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் ஜெயம் ரவி, அஞ்சலியுடன் த்ரிஷாவும் நடிக்க உள்ளார்.
சமீபத்தில் தொடங்கிய இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல்டில் ஜெயம் ரவி, அஞ்சலி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. கதைப்படி அஞ்சலிக்கு கிராமத்து பெண் வேடம். படத்தில் மெயின் ஹீரோயினாக நடிக்க காஜல் அகர்வாலிடம் கால்ஷீட் கேட்டிருந்தனர்.

அவரும் ஒப்புக் கொண்டிருந்தார். கடைசி நேரத்தில் அவர் ஒன்றரை கோடி சம்பளம் கேட்க, அதுக்கு நீ வொர்த் இல்லேம்மா என்று அவரை கழற்றிவிட்டு த்ரிஷாவை ஒப்பந்தம் செய்துள்ளது, படத்தை தயாரிக்கும் லட்சுமி மூவி மேக்கர்ஸ்.
 
வரும் ஆகஸ்ட் 10 -ம் தேதி முதல் த்ரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுக்கின்றனர். இதில் மாடர்ன் பெண்ணாக அவர் வருகிறார்.