வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Updated : திங்கள், 11 ஆகஸ்ட் 2014 (13:27 IST)

சுரபிக்கு அடித்த ஜாக்பாட்

யாருக்கு எப்போது அதிர்ஷ்டம் அடிக்கும் என்று கணிக்க முடியாது. அதுவும் நடிகைகள் விஷயத்தில் எந்த ஜோ‌சியமும் செல்லுபடியாவதில்லை.
மிஷ்கினின் முகமூடி படத்தில் அறிமுகமான பூஜா ஹெக்டேயை அதன் பிறகு ஒருவர்கூட தமிழ்ப் படத்தில் ஒப்பந்தம் செய்யவில்லை. முகமூடியின் மைனஸ்களில் முதலாவதாக குறிக்கப்பட்டவர் பூஜா ஹெக்டே.
 
தமிழில் சுத்தமாக ஒதுக்கப்பட்ட அவர் இந்தியில் ஹிர்த்திக் ரோஷன் ஜோ‌டியாக மொகஞ்சதாரோ படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதேபோலொரு அதிர்ஷ்டம் சுரபிக்கும் அடித்துள்ளது.
 
இவன் வேற மாதிரி படத்தில் அறிமுகமான இந்த டெல்லி மாடலுக்கு அதன் பிறகு கிடைத்த ஒரே படம், வேலையில்லா பட்டதாரி. அதுவும் ஹீரோயின் கிடையாது. சும்மா வந்து போகும் வேடம். சுரபிக்கு தமிழில் சுத்தமாக மார்க்கெட் இல்லை. 
 
அதேநேரம் ஹிர்த்திக் ரோஷனுடன் விளம்பர படத்தில் நடிக்கும் வாய்ப்பு சுரபிக்கு கிடைத்துள்ளது. விளம்பரம் என்பது பாலிவுட்டுக்குள் நுழைய பலரும் பயன்படுத்தும் பின் வாசல். சுரபி மட்டும் நுழையாமலா இருப்பார்?