வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By John
Last Updated : புதன், 9 ஏப்ரல் 2014 (13:47 IST)

சமையல் வகுப்புக்கு செல்லும் நஸ்ரியா நசீம்

என்னதான் பெரிய நடிகையாக இருந்தாலும் திருமணம் என்று வந்தால் அவர்களுக்கு ஒதுக்கப்படும் முதல் மற்றும் முதன்மையான இடம் சமையலறைதான். திருமணமும், குடும்பமும் பெண்களுக்கு சுமை என்று பெரியார் சொன்னது சும்மாயில்லை.
Nazriya Nazim
நடிகையாக இருந்தவரை நஸ்ரியா விரும்பிய உணவு அவரது டேபிளுக்கு வரும். ஃபகத் பாசிலுடன் திருமணம் நிச்சயமான பிறகு கதையே வேறு. இனி மற்றவர்கள் விரும்புகிற உணவுகளையும் அவர்களது மேஜைக்கு தயாரித்து தருகிற வேலையை நஸ்ரியா செய்ய வேண்டும். 
 
இந்த கேட்டரிங் கரியரை சிறப்பாக செய்யும் பொருட்டு தற்போது கேட்டரிங் வகுப்புக்கு செல்ல ஆரம்பித்துள்ளாராம். இரண்டு மாத கோர்ஸ். அது முடிந்ததும் டூ மினிட்ஸ் நூடுல்ஸ் முதல் டூ அவர்ஸ் பிரியாணிவரை தயார் செய்கிற உதாரண குடும்பத் தலைவி கதாபாத்திரத்துக்கு நஸ்ரியா தகுதியடைந்துவிடுவார். 
 
வாழ்த்துக்கள்.