வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Updated : வியாழன், 31 ஜூலை 2014 (13:20 IST)

இரண்டு மணி ஐம்பது நிமிடங்கள்... திகட்டுமா ஜிகர்தண்டா?

கார்த்திக் சுப்பாராஜுக்கும், ஜிகர்தண்டா தயாரிப்பாளர் கதிரேசனுக்கும் ஏற்பட்ட கசமுசாவுக்கு முக்கிய காரணம் படத்தின் சில காட்சிகளை கதிரேசன் எடிட் செய்யச் சொன்னது. சென்சார் ஆட்சேபணை தெரிவித்த காட்சிகளை நீக்கினால் யு சான்றிதழ் கிடைக்கும், வரிச் சலுகை பெறலாம் என்பது அவரது எண்ணம். ஆனால் ஒரு கிரியேட்டராக கார்த்திக் சுப்பாராஜால் அதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
கதிரேசன் காட்சிகளை நீக்க சொன்னதற்கு இன்னொரு காரணம் படத்தின் நீளம். இரண்டு மணி ஐம்பது நிமிடங்கள் ஓடுகிறது ஜிகிர்தண்டா. 
 
சமீபத்தில் விழா ஒன்றில் பேசிய விஜய் அறிமுக இயக்குனர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். அது, படத்தை 2.30 மணி நேரத்துக்கு மேல் கண்டிப்பாக இழுக்காதீர்கள். படம் பார்க்கிற ரசிகர்களுக்கு போர் அடித்துவிடும். 
 

விஜய்யின் கருத்தில் உண்மை இல்லாமல் இல்லை. இந்த பயம்தான் கதிரேசன் சில காட்சிகளையாவது நீக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்ததற்கு காரணம்.
ஆனால் கார்த்திக் சுப்பாராஜின் தரப்போ, தமிழ் சினிமாவில் வசூல் சாதனைப் படைத்த எந்திரன், துப்பாக்கி படங்களெல்லாம் ஜிகர்தண்டாவைப் போல் நீளமான கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஓடுகிற படங்கள்தான் என்று வாதிடுகிறார்கள்.
 
எப்படியோ... ஜிகர்தண்டா திகட்டாமல் இருந்தால் சரிதான்.