வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 7 ஏப்ரல் 2021 (18:29 IST)

சூப்பர் ஸ்டார் இயக்கத்தில் நடிக்கும் இளம் நடிகர்

மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டார் மோகன்லால். இவரது ஒவ்வொரு படமும் வசூலிலும் சரி. விமர்சனம் ரீதியாகவும் நல்லவரவேற்பு பெரும். இந்நிலையில், தற்போது அவரது இயக்கிவரும் படத்தின் முன்னணி நடிகர் ஒருவர் இணைந்துள்ளார்.

மோகன்லால் இயக்கும் படத்தின் டைட்டில் 'பரோஸ்' (Barroz). இந்த படத்தில் மோகன்லால் டைட்டில் கேரக்டரில் நடிக்கவுள்ள நிலையில் அவருடன்

Paz Vega என்ற ஹாலிவுட் நடிகை நடிக்கவுள்ளார். இந்த படத்தில் இணையும் இன்னொரு ஹாலிவுட் நட்சத்திரம் Rafael Amargo. ஸ்பெயின் நாட்டை சேர்ந்த இவர் பல சூப்பர்ஹிட் ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடிக்கவுள்ளதால் இந்த படம் உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.

அதேபோல் மோகன்லாலை வைத்து லூசிபர் என்ற ஹிட் படத்தை இயக்கிய நடிகர் பிரித்விராஜ் இப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது,.