“ஆமா… எனக்கு மனநிலை சரியில்லை” – உண்மையைப் போட்டுடைத்த ட்விட்டர் சுசித்ரா

Cauveri Manickam| Last Modified வெள்ளி, 28 ஏப்ரல் 2017 (12:41 IST)
ட்விட்டர் புகழ் பின்னணிப் பாடகியான சுசித்ரா, தனக்கு மனநிலை சரியில்லை என்ற தகவல் உண்மைதான் என  வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார்.
 
 
ஆர்.ஜே. மற்றும் பின்னணிப் பாடகியாக வலம் வந்தவர் சுசித்ரா. கடந்த பிப்ரவரி மாதம், இவருடைய ட்விட்டர் கணக்கில் இருந்து சினிமா பிரபலங்களின் அந்தரங்கமான புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகின. இந்தச் சம்பவம், திரையுலகையே தெறிக்கவிட்டது. 
 
‘சுசித்ராவுக்கு மனநிலை சரியில்லை. அவருடைய கணக்கை யாரோ ஹேக் செய்துவிட்டனர்’ என்று சுசியின் கணவர் கார்த்திக் கூற, அதை மறுத்த சுசித்ரா, ‘தன் கணக்கை யாரும் ஹேக் செய்யவில்லை’ என்று தெரிவித்தார். 10 நாட்களுக்கும்  மேலாக பரபரப்பை ஏற்படுத்திய இந்த விஷயத்துக்குப் பின்னர், சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு நீக்கப்பட்டது. அவரும் எங்கு  போனார் எனத் தெரியவில்லை. 
 
இந்நிலையில், பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு மனம் திறந்த பேட்டி அளித்துள்ளார் சுசித்ரா. ‘தனக்கு மனநிலை சரியில்லாமல் போனது உண்மைதான்’ எனவும், ‘தற்போது கொஞ்சம் கொஞ்சமாகத் தேறிவருவதாகவும்’ அவர்  தெரிவித்துள்ளார். பிப்ரவரி 19ஆம் தேதி முதல் சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுவிட்டதாம். 
 
ட்விட்டரில் வெளியான புகைப்படங்களால் பிரபலங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு தான் வருந்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது அமெரிக்காவில் உள்ள தன்னுடைய சகோதரியில் வீட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார்  சுசித்ரா.


இதில் மேலும் படிக்கவும் :