Woolfell - யுவனின் முதல் சர்வதேச திரைப்படம்


Caston| Last Modified புதன், 28 அக்டோபர் 2015 (17:56 IST)
எஸ், யுவன் ஷங்கர் ராஜாவின் இசை சர்வதேச அளவுக்கு செல்லவிருக்கிறது.
 
ஒரு காலத்தில் ஓஹோவென்றிருந்த யுவன் சமீபமாக எந்த ஹிட்டும் கொடுக்கவில்லை. உணர்ச்சியின் நரம்புகளை மீட்டிய யுவனின் இசை, இப்போதெல்லாம் தோலைக்கூட தீண்டுவதில்லை. இந்த வறட்சியிலிருந்து மீள அவருக்கும் ஒரு மாற்றம் தேவை. அது இந்த சர்வதேச வாய்ப்பின் மூலம் அமைந்திருக்கிறது.

 
 
Woolfell என்ற ஆங்கில சயின்ஸ் ஃபிக்ஷன் அனிமேஷன் படத்திற்கு யுவன் இசையமைக்கிறார். படத்தின் தரமும், சந்தையும் சர்வதேசம் என்றாலும் படைப்பாற்றல் முழுக்க தமிழகம்தான். 
 
ஹரி ஹரன் படத்தை இயக்க, யுவன் இசையமைக்க, பிரவீண் எடிட்டிங்கை கவனிக்கிறார்.
 
யுஎஸ் தயாரிப்பான இந்தப் படத்தை ஹரிகேன் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.


இதில் மேலும் படிக்கவும் :