வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : வியாழன், 27 அக்டோபர் 2016 (14:16 IST)

அற்புதமான வரவேற்பு... பிரகாஷ்ராஜ் நெகிழ்ச்சி

மும்பை திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட சில சமயங்களில் படத்துக்கு அற்புதமான வரவேற்பு கிடைத்ததாக பிரகாஷ்ராஜ் ட்விட்டரில் கூறியுள்ளார்.

ப்ரியதர்ஷன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா ரெட்டி, அசோக் செல்வன் உள்பட பலர் நடித்த திரைப்படம் சில சமயங்களில். எய்ட்ஸ் விழிப்புணர்வை மையப்படுத்திய இந்தப் படம், அக்டோபர் 6-ஆம் தேதி அமெரிக்காவில், கோல்டன் குளோப் விருதுக்காக திரையிடப்பட்டது. 
 
இந்தியாவில் முதல்முறையாக மும்பை திரைப்பட விழாவில் சில சமயங்களில் திரையிடப்பட்டது. ப்ரியதர்ஷன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
 
திரைப்படத்துக்கு, திரைப்பட காதலர்களிடமிருந்து சிறப்பான வரவேற்பு கிடைத்ததாக, பிரகாஷ்ராஜ் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.