கட்டப்பா, பாகுபலியைக் கொன்றதற்கான காரணமே வேறாம்…

கட்டப்பா, பாகுபலியைக் கொன்றதற்கான காரணமே வேறாம்…


Cauveri Manickam| Last Updated: திங்கள், 1 மே 2017 (15:48 IST)
கட்டப்பா, பாகுபலியை ஏன் கொன்றான் என்பதற்கான புதிய காரணமொன்றை உலவ விட்டிருக்கின்றனர் நெட்டிசன்கள்.

 
 
எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸான படம் ‘பாகுபலி-2’. 2005-ஆம் ஆண்டு வெளியான ‘பாகுபலி’ முதல் பாகத்தில், ‘கட்டப்பா, பாகுபலியை ஏன் கொன்றான்?’ என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது. இந்தக் கேள்விக்கு விடை தெரிந்து கொள்வதற்காகவே பலர் இரண்டாம் பாகத்தைப் பார்ப்பதற்கு ஆர்வம் காட்டினர்.
 
இந்நிலையில், படம் ரிலீஸாகிவிட்டதால், அதற்கான விடை கிடைத்துள்ளது. ஆனால், நெட்டிசன்கள் இன்னொரு கலாய் காரணத்தைச் சொல்லி வருகின்றனர். படம் சக்சஸ்ஃபுல்லாக ஓடுவதால், அதைவைத்து பப்ளிசிட்டி தேடிக்கொள்ள நினைத்தது போத்தீஸ். எனவே, கடந்த சில வருடங்களுக்கு முன்பு சத்யராஜ் மற்றும் ரம்யா கிருஷ்ணனை வைத்து எடுத்த விளம்பரத்தை, தற்போது ஒளிபரப்பி வருகிறது போத்தீஸ்.
 
கதைப்படி, ரம்யா கிருஷ்ணனின் உண்மை மகனான பல்வாள் தேவன் ராணா, சத்யராஜைப் போல வாட்டசாட்டமாக உள்ளார். எனவே, சத்யராஜுக்கும், ரம்யா கிருஷ்ணனுக்கும் பிறந்த குழந்தைதான் பல்வாள் தேவன் என்றும், தன் பிள்ளைக்கு அரசப்பதவி கிடைக்கவே பாகுபலியை கட்டப்பாவான சத்யராஜ் கொன்றார் என்றும் புதுக்கதை எழுதியுள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :