1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. What If Thalapathy Vijay Starred in RJ Balaji's 'Karuppu'? Editor Kalaivanan's Striking Revelation!

‘கருப்பு’ படத்தில் விஜய் நடித்திருந்தால் வேற லெவலில் இருந்திருக்கும்: எடிட்டர் கலைவாணன்..

jananayagan
திரைத்துறையில் வெளியாகும் சில திரைப்படங்களின் பின்னணி தகவல்கள் ரசிகர்களுக்கு எப்போதுமே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதுண்டு. அந்த வகையில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவான 'கருப்பு' திரைப்படத்தின் அண்மைக்கால தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
 
இப்படத்தின் படத்தொகுப்பாளர் கலைவாணன் சமீபத்திய பேட்டி ஒன்றில், "இப்படத்தில் விஜய் சார் நடித்திருந்தால் இன்னும் பயங்கரமாக, மாஸாக இருந்திருக்கும்" என்று தனது ஆதங்கத்தையும் விருப்பத்தையும் பகிர்ந்துள்ளார்.
 
'கருப்பு' படத்தின் கதையை இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி முதன்முதலில் தளபதி விஜய்யிடம் தான் சொல்லியிருந்தார். ஆனால் விஜய் சில காரணங்களுக்காக இந்த படத்தில் நடிக்கவில்லை. 
 
ஒருவேளை விஜய் இதில் நடித்திருந்தால், ’கருப்பு’ படம் முற்றிலும் மாறுபட்ட, மிரட்டலான ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படமாக அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. கால்ஷீட் மற்றும் அரசியல் நகர்வுகள் காரணமாக இந்த கூட்டணி அப்போது அமையாமல் போயிருக்கலாம் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இந்த தகவல் தற்போது தளபதி ரசிகர்களை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
 
 
Edited by Siva
About Writer
Webdunia
அடுத்த கட்டுரையில்
வசூலில் பிகில், வாரிசு சாதனைகளைத் தகர்த்தெறிந்த சூர்யாவின் கருப்பு