என் படத்திற்கு அமோக வரவேற்பு – பா. ரஞ்சித் பெருமிதம்

Sinoj| Last Modified வெள்ளி, 5 மார்ச் 2021 (21:26 IST)

பா ரஞ்சித்தின் நீலம் புரடொக்சன்ஸ் நிறுவனம் தற்போது வரிசையாக படங்களைத் தயாரித்து வருகிறார். அதில் ஒன்றாக இப்போது குதிரைவால் திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்த திரைப்படத்தில் கலையரசன் மற்றும் அஞ்சலி பாட்டில் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை மனோஜ் லியோனல் ஜோன்ஸ் மற்றும் ஷாம் சுந்தர் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர். இந்த திரைப்படத்தை மேஜிக்கல் ரியலிசம் எனும் வகையில் உருவாக்கியுள்ளனர் படக்குழுவினர்.

இந்த படம் விரைவில் ரிலீஸாகவுள்ள நிலையில் இப்போது கேரள அரசால் நடத்தப்படும் கேரள சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டு அங்கு திரையிடப்பட்டது.

இது அங்குள்ள பார்வையாளர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளதாக இயக்குநர் பா.ரஞ்சித் த்ரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது :

கேரளாவில் நடந்த @iffklive இல்,@kuthiraivaal திரைப்படம் பார்வையாளர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. விரைவில் #KuthiraiVaal-ஐ திரையில் வெளியிடுவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறோம். @Manojjahson @Shyamoriginal #GRajesh @karthikmuthu14 @Gridaran @KalaiActor @AnjaliPOfficial @YaazhiFilms_
எனத் தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :