செவ்வாய், 17 பிப்ரவரி 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 20 ஜனவரி 2026 (16:29 IST)

தணிக்கை வாரியத்தால் மன உளைச்சல்!.. நஷ்டம்!.. நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் வாதம்!..

தணிக்கை வாரியத்தால் மன உளைச்சல்!.. நஷ்டம்!.. நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் வாதம்!..
ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தணிக்கை சான்றிதழ கொடுக்க வேண்டிய நேரத்தில் மீண்டும் மறு தணிக்கை செய்யப் போகிறோம் என தணிக்கை வாரியம் சொன்னதால் அதிர்ச்சியடைந்த தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி.ஆஷா ‘உடனே சென்சார் சான்றிதழை கொடுங்கள்’ என தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிட்டது ஆனால், அதை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. அதன் வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் வெகு நேரமாகவே இரு தரப்பும் தங்களின் வாதங்களை முன் வைத்து வருகிறது. தயாரிப்பு நிறுவனம் சார்பில்    ‘தணிக்கை வாரியத்தின் நடைமுறைகளால் மன உளைச்சல் அடைந்திருக்கிறோம்.. திட்டமிட்டபடி பணத்தை வெளியிடாமல் போனதால் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது..ரிலீஸ் தெதியை சொல்லாவிட்டால் அமேசான் ஓடிடி நிறுவனம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்.. எனவே இந்த வழக்கில் இன்றே தீர்ப்பு வழங்குங்கள்’ என நீதிபதியிடம் கோரிக்கை வைத்தது.

ஆனால் அது ஏற்க மறுத்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஒரே நாளில் நடைமுறைகளை முடித்து உத்தரவு வழங்க முடியாது என்று கூறியிருக்கிறார்கள். வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விரைவில் இது தொடர்பாக நீதிபதி தீர்ப்பை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.