செவ்வாய், 11 நவம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 9 அக்டோபர் 2025 (10:37 IST)

பாகுபலி படத்தில் முதலில் ஹ்ருத்திக் ரோஷன்தான் நடிக்க இருந்தாரா?... தயாரிப்பாளர் கொடுத்த பதில்!

பாகுபலி படத்தில் முதலில் ஹ்ருத்திக் ரோஷன்தான் நடிக்க இருந்தாரா?... தயாரிப்பாளர் கொடுத்த பதில்!
இந்திய சினிமாவில் இப்போது அதிகமாக பேசப்படும் பேன் இந்தியா என்ற வகைமையை முதல் முதலில் உருவாக்கியதே ராஜமௌலியின் ‘பாகுபலி’ திரைப்படம்தான். அவர் இயக்கிய பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்கள் இந்தியா முழுவதும் வெற்றி பெற்று வசூலில் சாதனைப் படைத்தன. அதன் பின்னர் கே ஜி எஃப், புஷ்பா என அந்த பார்முலாவைப் பின்பற்றி வெற்றிக் கொடி நாட்டின.

பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சதய்ராஜ் மற்றும் நாசர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவான பாகுபலி முதல் பாகம் ரிலிஸாகி 10 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளது. இதையடுத்து அதன் இரண்டு பாகங்களையும் ஒன்றாக்கி ஒரே பாகமாக ரி ரிலீஸ் செய்யவுள்ளனர். வரும் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி திரையரங்குகளில் ‘பாகுபலி-The epic” என்ற பெயரில் இந்த படம் ரிலீஸாகவுள்ளதாக எஸ் எஸ் ராஜமௌலி அறிவித்துள்ளார்.

இந்நிலையில் பாகுபலி படத்தில் நடிக்க முதலில் இந்தி நடிகர் ஹ்ருத்திக் ரோஷனைதான் படக்குழு அணுகியதாக ஒரு தகவல் பரவி வருகிறது. அதைத் தயாரிப்பாளர் ஷோபு மறுத்துள்ளார். இது குறித்துப் பேசியுள்ள அவர் “இது முழுக்க முழுக்க பிரபாஸை வைத்து எடுப்பதற்காக எழுதப்பட்ட கதை.” என வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.