1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. viswanath and sons movie facing issue in covai

விஸ்வநாத் & சன்ஸ் படத்துக்கு வந்த சிக்கல்!.. கோவையில் வெளியாகுமா?...

viswanath
வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ, ராதிகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த கருப்பு திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் சூர்யாவின் அடுத்த படமாக விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் வருகிற 14ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. பாடல்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று இந்த படத்தின் மீது எதிர்பார்த்து ஏற்படுத்தி இருக்கிறது..

அதேபோல் இந்த படத்தின் டிரெய்லரும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. படம் சூப்பர் ஹிட் அடிக்கும் என பலரும் எதிர்பார்க்கிறார்கள். இந்நிலையில்தான் கோவையில் இந்த திரைப்படம் வெளியாகும என்கிற சந்தேகம் எழுந்திருக்கிறது.

ஏனெனில் கோவையில் பல தியேட்டர்களை தனது கையில் வைத்திருக்கும் வினியோகஸ்தர் தியேட்டரில் கிடைக்கும் லாப சதவீதத்தில் அதிக பங்கு கேட்பதாகவும் அதை தயாரிப்பாளர் கொடுக்க மறுப்பதால் படத்தை நாங்கள் திரையிட மாட்டோம் என கூறிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. எனவே, கோவையில் படம் வெளியாகுமா என்பது தெரியவில்லை.

கடந்த 5 வருடங்களாக ரெட் ஜெயன்ட் படங்களை வெளியிட்டபோது பல வினியோகஸ்தர்கள் அடக்கி வாசித்தார்கள். தற்போது ரெட் ஜெயண்ட் அடக்கி வாசிப்பதால் அந்தந்த ஏரியாவில் இருக்கும் குறுநில மன்ன விநியோகஸ்தர்கள் தலை தூக்க ஆரம்பித்து விட்டார்கள் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
DC பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் வருது!.. வாழ்த்து சொன்ன சூர்யா!..