1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. vishnu vishal sharing secreat about trisha dog

திரிஷா வச்சிருக்கும் நாய் பற்றிய ரகசியம்!.. இப்படி லீக் பண்ணிட்டாரே விஷ்ணு விஷால்!...

trisha
திரிஷாவின் புகைப்படத்தை யோசித்தால் அவருடன் எப்போதும் ஒரு நாய்க்குட்டி இருப்பது எல்லோருக்கும் நினைவுக்கு வரும். திரிஷா நாய்க்குட்டிகளை வளர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர். இதுவரை பல நாய்களையும் அவர் வளர்த்திருக்கிறார். தற்போது இஸ்ஸி கிருஷ்ணன் என்ற செல்ல நாய்க்குட்டியை அவர் வளர்த்து வருகிறார்.

திரிஷா இன்ஸ்டாகிராமில் பகிரும் பல புகைப்படங்களில் இந்த நாய்க்குட்டியை அவரின் மடியில் பார்க்க முடியும். தனது நாய்க்குட்டியுடன் நேரம் செலவழிக்கும் பல புகைப்படங்களையும் அவர் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்..

இந்நிலையில்தான், திரிஷா வளர்த்து வரும் நாய்க்குட்டியான இஸ்ஸி பற்றி ஒரு முக்கிய தகவலை நடிகர் விஷ்ணு விஷால் கூறியிருக்கிறார். நான் இதுவரை இந்த தகவலை யாரிடமும் சொன்னதில்லை.. திரிஷா வளர்த்து வரும் நாய்க்குட்டி இஸ்ஸி நான் வளர்த்தி வரும் டெடி நாயின் குட்டிய்தான். அது Poodle  வகையை சார்ந்தது. எனது மனைவியும் திரிஷாவும் நெருங்கிய தோழிகள். அவர்கள் எப்போதும் நாய்களை பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள். இந்த ரகசியத்தை சொன்னதற்காக திரிஷா என் மீது கோபப்பட மாட்டார் என நம்புகிறேன்’ என ஜாலியாக பேசியிருக்கிறார்.
அடுத்த கட்டுரையில்
அவசர அவசரமாக தங்கத்தை விற்கும் பொதுமக்கள்.. 3 மாதங்களில் 50000 கிலோ விற்பனையா?