வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 23 டிசம்பர் 2015 (11:45 IST)

விஷாலின் தெலுங்கு கதகளி

விஷாலின் படங்களுக்கு ஆந்திரா, தெலுங்கானாவில் வரவேற்பு இருக்கிறதோ இல்லையோ, தனது படங்கள் தெலுங்கில் வெளியாக வேண்டும் என்பதில் பிடிவாதமாக உள்ளார் விஷால். தாய் மொழி தெலுங்காக இருப்பதனாலும் இருக்கலாம். 


 


 
பாண்டிராஜ் இயக்கத்தில் அவர் நடித்துள்ள கதகளி படமும் தெலுங்கு பேசுகிறது. இந்த ஆக்ஷன் படத்தின் பாடல்கள், ட்ரெய்லரை டிசம்பர் 24 வெளியிட்டு, படத்தை பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர். 
 
கதகளியின் தெலுங்குப் பதிப்பின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லரை புத்தாண்டு அன்று வெளியிடுகின்றனர். 
 
விஷால் ஃபிலிம் ஃபேக்டரியும், பாண்டிராஜ் புரொடக்ஷனும் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்தை ஸ்ரீதேனாண்டான் ஃபிலிம்ஸ் தமிழகமெங்கும் விநியோகிக்கிறது.