வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Modified: புதன், 4 நவம்பர் 2015 (13:17 IST)

டிசம்பரில் திரைக்கு வரும் விசாரணை, குற்றமே தண்டனை

வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டும், விருதும் வென்ற வெற்றிமாறனின் விசாரணை திரைப்படம் டிசம்பர் மாதம் திரைக்கு வருகிறது. வெற்றிமாறனின் க்ராஸ் ரூட், தனுஷின் வுண்டர்பார் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்தின், சர்வதேச விநியோக உரிமையை லைக்கா வாங்கியுள்ளது.


 


மணிகண்டனின் இரண்டாவது படம், குற்றமே தண்டனையும் டிசம்பர் மாதம் திரைக்கு வருகிறது.

விசாரணை, குற்றமே தண்டனை இரண்டும் சமீபத்தில் மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு அனைவரின் பாராட்டையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.