விக்ரமுடன் ஐந்து நாள்கள் ஆடிய சார்மி

Mahalakshmi| Last Modified வியாழன், 5 மார்ச் 2015 (12:38 IST)
விக்ரம் நடிக்கும் விஜய் மில்டனின் பத்து எண்றதுக்குள்ள படத்தில் சார்மி ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார்.
இந்தப் பாடல் குறித்து பேசிய சார்மி, இது வழக்கமான குத்துப் பாடல் கிடையாது. தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்தப் பாடல் காட்சி எடுக்கப்பட்டுள்ளது. என்னுடைய அழகை மட்டுமின்றி என்னுடையை திறமையையும் இந்தப் படத்தில் பார்க்கலாம் என்றார்.
 
நடன இயக்குனர் ஷோபி இந்த நடனத்தை அமைத்துள்ளார். பாடலில் சார்மிக்கு புரியாத வரிகளுக்கு விக்ரம் அர்த்தம் சொல்லி தந்திருக்கிறார். விக்ரமுடன் ஆடிய அந்த ஐந்து தினங்களும் மறக்க முடியாது என சார்மி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :