விஜய், செல்வராகவன் இணையும் படம்... சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது


லெனின் அகத்தியநாடன்| Last Updated: செவ்வாய், 4 அக்டோபர் 2016 (19:55 IST)
செல்வராகவன் விஜய்யை சந்தித்து கதை சொன்னது குறித்து ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். இந்தப் படத்தை சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிக்க வாய்ப்புள்ளது எனவும் கூறியிருந்தோம். அது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
 
விநாயகர் சதுர்த்தி அன்று அன்னை இல்லத்தில் செல்வராகவன் இயக்கத்தில் விஜய் நடிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், அட்லி படத்தை முடித்ததும் செல்வராகவன் படத்தில் விஜய் நடிப்பது என முடிவு செய்யப்பட்டதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
இந்தப் படத்துக்கு முன், சந்தானம் நடிக்கும் படத்தை செல்வராகவன் இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :