500 எபிசோட்களை நிறைவு செய்த அய்யனார் துணை சீரியல்.. ரசிகர்கள் வாழ்த்து..
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை தொடர் 500 எபிசோட்களை நிறைவு செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. தொடக்கம் முதலே ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ள இந்தத் தொடர், விஜய் டிவியின் அதிக டிஆர்பி பெறும் தொடர்களில் முக்கிய இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் அய்யனார் துணை, எளிமையான குடும்ப பின்னணியை மையமாகக் கொண்டு நகர்ந்து வருகிறது. குடும்ப உறவுகள், காதல், திருமணம், மோதல் என பல்வேறு அம்சங்களை கலந்து விறுவிறுப்பாக கதை நகர்த்தப்படுவதால், இந்தத் தொடருக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உருவாகியுள்ளது.
எதிர்நீச்சல் தொடரின் மூலம் பிரபலமான நடிகை மதுமிதா, அய்யனார் துணை தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக அரவிந்த் சேஜு நடிக்கிறார். மேலும் முன்னா, பர்வேஷ், அருண் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர். நடிகர் ரோசரி, இவர்களுக்கு தந்தையாக நடித்து வருகிறார்.
500 எபிசோட்களை கடந்த நிலையிலும், தொடரின் விறுவிறுப்பு குறையாமல் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கதை நகர்ந்து வருகிறது. இதன் தெலுங்கு மொழி மறுஉருவாக்கமும் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Edited by Siva
