நயன்தாராவுக்காக குத்தாட்டம் போடும் விஜய் சேதுபதி!!


Sugapriya Prakash| Last Updated: வியாழன், 15 டிசம்பர் 2016 (18:46 IST)
சீனியர் ஹீரோக்கள் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்ட நயன்தாரா இளவயது ஹீரோக்கள் படங்களில் நடித்து வருகிறார்.

 
 
தற்போது, ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார் நயன்தாரா. இதில் அதர்வா ஹீரோ. ஆனால் படத்தில் இருவரும் ஜோடி கிடையாதாம்.
 
அதர்வாவின் அக்காவாக நயன்தாரா நடிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இப்படத்தில் கமர்ஷியல் அம்சமாக நயன்தாராவை குத்தாட்டம் ஒன்றிற்கு பயன்படுத்த இயக்குனர் முடிவு செய்தார். 
 
அதற்கேற்ப காட்சி ஜோடிக்கப்பட்டு, நயன்தாராவுடன் குத்தாட்டம் போட விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்படுகிறார். நயன்தாராவுடன் ஆட வேண்டும் என்று கேட்டதுமே மறுப்பு சொல்லாமல் ஓகே சொல்லிவிட்டாராம் விஜய் சேதுபதி. 
 


இதில் மேலும் படிக்கவும் :