ஞாயிறு, 15 மார்ச் 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 3 மே 2025 (12:10 IST)

விஜய் சேதுபதி, பாண்டிராஜ் & சந்தோஷ் நாராயணன் கூட்டணி – இன்று வெளியாகும் டைட்டில் டீசர்!

விஜய் சேதுபதி, பாண்டிராஜ் & சந்தோஷ் நாராயணன் கூட்டணி – இன்று வெளியாகும் டைட்டில் டீசர்!
இயக்குனர் பாண்டிராஜ் தமிழ் சினிமாவின் முக்கியமான கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவர். பசங்க படத்தின் மூலம் அறிமுகமான அவர் அடுத்தடுத்து இயக்கிய கடைகுட்டி சிங்கம், நம்ம வீட்டுப் பிள்ளை போன்ற திரைப்படங்கள் பெரியளவில் வெற்றியைப் பெற்றன. கடைசியாக அவர் இயக்கிய ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் 2022 ஆம் ஆண்டு ரிலீஸாகி தோல்வி படமாக அமைந்தது.

இதனால் பாண்டிராஜ் தன்னுடைய அடுத்த படத்தின் திரைக்கதையை உருவாக்க ஒரு இடைவெளி எடுத்துக்கொண்டார். திரைக்கதையை எழுதி முடித்த பாண்டிராஜ் இப்போது விஜய் சேதுபதி நடிப்பில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அந்த  கதையை இயக்கி வருகிறார். நித்யா மேனன் கதாநாயகியாக நடக்கிறார். யோகி பாபு மற்றும் சரவணன் உள்ளிட்டவர்கள் மற்ற முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பதாக சமீபத்தில் அறிவிக்கபப்ட்ட நிலையில் இன்று மாலை இந்த படத்தின் டைட்டில் டீசர் அறிவிக்கப்பட உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.